மான்ஸ்டராக மாறி வருகின்றார்.. Silver Jubilee Star Mohan - வெளியானது "ஹரா" பட பொங்கல் ஸ்பெஷல் ப்ரோமோ!

By Ansgar R  |  First Published Jan 15, 2024, 12:06 PM IST

Silver Jubilee Star Mohan : மூத்த தமிழ் சினிமா நடிகர் மோகன் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் "ஹரா" படத்திலிருந்து பெரு ப்ரோமோ வீடியோ பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.


உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசன் அவர்களை வைத்து "தா தா 87" என்கின்ற திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் தான் விஜய் ஸ்ரீ ஜி. மேலும் இவருடைய இயக்கத்தில் "பொல்லாத உலகில் பயங்கர கேம்" மற்றும் "பவுடர்" ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அவர் இயக்கி வரும் நான்காவது திரைப்படம் தான் "ஹரா" இந்த திரைப்படத்தில் பிரபல மூத்த தமிழ் திரை உலக நடிகர் மைக் மோகன் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று பொங்கல் தின ஸ்பெஷலாக "ஹரா" திரைப்படத்திலிருந்து ஒரு ப்ரோமோ காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. 

Tap to resize

Latest Videos

பிரம்மாண்டம் எல்லாம் போதும்.. ஒரு பக்கா Commercial படம்.. களமிறங்கும் பிரபாஸ் - Raja Saab கம்மிங் சூன்!

கையில் துப்பாக்கியுடன் ஒரு கேங்ஸ்டர் போல காட்சியளிக்கும் நடிகர் மோகனின் அந்த ப்ரோமோ வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

கர்நாடகாவில் பிறந்த நடிகர் மோகன் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான பாலு மகேந்திராவின் "மூடுபடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் உச்சகட்டத்தில் இருந்த காலத்திலேயே அவர்களுக்கு இணையான புகழோடு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து புகழ் பெற்றவர் மோகன்.

இறுதியாக கடந்த 1999 ஆம் ஆண்டு "அன்புள்ள காதலுக்கு" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த மோகன் அதன்பிறகு நடிப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 10 ஆண்டுகள் கழித்து "சுட்ட பழம்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் சுமார் 16 ஆண்டு காலமாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் மோகன். 

Presenting the Special promo video starring Silver Jubilee Star https://t.co/jYdHGjBX3t

A Film
A musical 🎼 … pic.twitter.com/KaYDwCwQtV

— Nikil Murukan (@onlynikil)

இந்த சூழ்நிலையில் தற்பொழுது விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் "ஹரா" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். அதேபோல தளபதி விஜய் அவர்களுடைய 69வது திரைப்படமான "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

"இது வேற லெவல் காம்போ".. பொங்கலை அதிரடியாக மாற்றிய தளபதி விஜயின் GOAT - வெளியான மிரட்டல் போஸ்டர் இதோ!

click me!