நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடி, மதிய உணவை முடித்து கொண்டு, ஹோட்டலில் இருந்து வெளியேறும் புது வீடியோ தற்போது சமூக வலைதளத்தில், வெளியாகி வைரலாகி வருகிறது.
திரையுலகில் புது காதல் ஜோடியாக மாறியுள்ள, சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும், தற்போது வரை வெளிப்படையாக இருவரும் காதலித்து வரும் தகவலை வெளிப்படுத்தவில்லை என்றாலும், தங்களை பற்றி வெளிவரும் காதல் கிசுகிசுவை கண்டு கொள்ளாமல், பொது இடங்களில் அடிக்கடி ஜோடியாக வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விவேக் முதல் மயில்சாமி வரை... சமீபத்தில் மட்டும் மாரடைப்பால் இத்தனை பிரபலங்கள் உயிர் பிரிந்துள்ளதா?
சமீபத்தில் கூட, பிரபல நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும், பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில்... மதிய உணவை முடித்து கொண்டு வெளியே வரும் போது ஊடகத்தின் கண்களில் சிக்கியபோது, எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பக் பக்... மேஜிக் நிகழ்ச்சியில் அந்தரத்தில் நின்று பாடிய பாடகி சித்ரா..! வைரலாகும் வீடியோ..!
முன்பை விட இருவரும் அடிக்கடி, பொது இடங்களில் சேர்ந்து காணப்படுவதால்... விரைவில் இந்த ஜோடி தங்களின் திருமணம் குறித்த தகவலையும் வெளியிட வாய்ப்புள்ளதாக இந்தி மீடியாக்களில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அதிதி ராவிடம், முன்னணி ஊடகம் ஒன்று சித்தார்த் உடனான உறவு குறித்து கேள்வி எழுப்பிய போது, தனக்கு மிகவும் பசியாக இருப்பதாக கூறி அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வைரலாகி வரும் சித்தார்த் - அதிதி ராவ் வீடியோ இதோ...