
நமது உணர்வுகளை இதயத்தில் தோன்றியதும் வெளிப்படையாக தயங்காமல் வெளிப்படுத்த உதவுவது தாய்மொழி தான். இது ஒரு மனிதனின் பால்ய காலம் முதல் அவனுடைய நாவில் பழக்கப்படத் தொடங்கியிருக்கும். நாட்டின் கலாச்சார, மொழியியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று சர்வதேச தாய்மொழி தினம் (international mother language day 2023) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தம் தாய்மொழியை நினைந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழ் மொழியை நினைத்து உருகி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அந்த பதிவில், மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழி தான் என வியந்தோதி எழுதியுள்ளார். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொண்டாலும், தாய்மொழியே சிறந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தன் ட்விட்டர் பதிவில்,"மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்."என பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் அவரது ரசிகர்களும் தாய்மொழி தின வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாய்மொழி தினம்: உயிருக்கு நிகரான தமிழ் மொழியின் சிறப்புகள்.. தாய்மொழி கல்வி நன்மைகள் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.