Shyam Singha Roy Release : OTT -ல் வெளியாகும் நானியின் ஷியாம் சிங்க ராய்.. எந்த தளத்தில் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jan 21, 2022, 02:50 PM IST
Shyam Singha Roy Release : OTT -ல் வெளியாகும் நானியின் ஷியாம் சிங்க ராய்..  எந்த தளத்தில் தெரியுமா?

சுருக்கம்

Shyam Singha Roy Release : படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல்  netflix ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது...அதோடு இன்று மாலை இந்த படத்திலிருந்து வீடியோ சாங் வெளியாகவுள்ளது..

நானி, சாய் பல்லவி மற்றும் கிருத்தி ஷெட்டி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷியாம் சிங்க ராய் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட தயாரிப்பாளர்கள், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் உள்ளனர்.  நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் வெங்கட் போயன பள்ளியால் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.  தேசிய விருது பெற்ற க்ருதி மகேஷ் மற்றும் யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஷ்யாம் சிங்க ராய் படத்தில் ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து தென் மொழிகளிலும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்த படத்தின்தமிழ் மொழி டீசரை நடிகர் சிவகார்த்தியேகன் இன்று ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன்  என  3 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்த படத்தில் நானி இரட்டை வேடத்தில் வருவதாக தெரிகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள டீசர் விறுவிறுப்பான bgm உடன் . த்ரில்லராக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல்  netflix ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது...அதோடு இன்று மாலை இந்த படத்திலிருந்து வீடியோ சாங் வெளியாகவுள்ளது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!