
ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது
இந்தியன் படத்தின் 2-வது பாகமான இந்தியன் 2 படம் ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 உள்ளது.
இந்த சூழலில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் சிம்பு, இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
'இந்தியன் 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டு தனது தந்தையை கௌரவிக்கும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் மேலும் கமல்ஹாசனின் காலில் விழுந்த அவர், அவரை கட்டி அணைத்தும் தனது அன்பை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விழாவில் தனது தந்தையை பாராட்டு செலுத்துவதை பெருமையாகக் கருதுவதாக அவர் பதிவிட்டுள்ளார்.. ஒரு புதிய பாடல் தொகுப்பை விரைவாக நிரல் செய்ததற்காக தனது இசைக்குழுவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ என்ன ஒரு இரவு. பிரமாண்டமான இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் என் அன்பு அப்பாவுக்கு மரியாதை செலுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் பாடும்போது அவர் சிரிப்பதைக் கண்டு எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இன்று அவரால் தான் இசையமைப்பாளராக இருக்கிறேன்..
சினிமாவில் சில அப்பாக்களின் அசாத்தியமான இசை வரலாற்றைக் கௌரவிக்கும் வகையில், புதிதாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடல்களின் தொகுப்பை ஒன்றிணைக்க அயராது உழைத்த என் திறமையான இசைக்குழுவுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியன் 2 படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த அவர், அனிருத்தின் இசையையும் பாராட்டி உள்ளார்.
ஸ்ருதி ஹாசன் தவிர, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோர் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையில் நடனமாடினர். இந்தியன் 2 படத்தின் நீளம் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளதால் இதை 2 பாகமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.