பிரேமலு நடிகையை காண குவிந்த ரசிகர்கள்... சென்னையில் கூட்ட நெரிசலில் சிக்கி படாதபாடுபட்ட மமிதா பைஜு- வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Jun 3, 2024, 1:22 PM IST

பிரேமலு படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆன நடிகை மமிதா பைஜு சென்னையில் ரசிகர்கள் மத்தியில் சிக்கியபோது எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.


மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் பிரேமலு. இப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் தான் நடிகை மமிதா பைஜு. அதுமட்டுமின்றி தற்போது தென்னிந்தியாவின் சென்சேஷனல் ஹீரோயினாகவும் மமிதா வலம் வருகிறார். அவர் நடிப்பில் தமிழில் ரெபல் திரைப்படம் வெளியானது. அப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மமிதா.

அதுமட்டுமின்றி பிரேமலு படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இதுதவிர விஷ்ணு விஷால் மற்றும் ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியகாவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் மமிதா. தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... 40 வயதில் கல்யாணம் பற்றி அதிரடி முடிவெடுத்த த்ரிஷா! பயில்வான் கூறி அதிர்ச்சி தகவல் - வேதனையில் பெற்றோர்!

இப்படி ஒரே படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற மமிதா பைஜுவுக்கு ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த சென்னையில் அண்மையில் மால் ஒன்றின் திறப்பு விழாவுக்கு நடிகை மமிதா பைஜுவை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

Actress at shop inauguration in Chennai

pic.twitter.com/hI086saVKY

— My Media (@myymedia)

பின்னர் மமிதா பைஜு வந்ததும் அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கிய மமிதாவும் ஒரு நிமிடம் பதறிப்போனார். பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் பவுன்சர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி, நடிகை மமிதா பைஜுவை பத்திரமாக அழைத்து சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Mamitha got scared after the rush @ chennai! 🙄🤯 pic.twitter.com/6XHaQfJt5Q

— Kαмαℓ ツ (@KamalOfcl)

இதையும் படியுங்கள்... கடல் தாண்டி சென்று காதலிக்கும் பிரியா பவானி சங்கர்... வெளிநாட்டில் லவ்வர் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஸ் இதோ

click me!