மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜோடியாக விசிட் அடித்த ஆதி - நிக்கி கல்ராணி

By Ganesh A  |  First Published Jun 2, 2024, 11:39 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜோடியாக சாமி தரிசனம் செய்ய வந்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடியுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


மிருகம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி டார்லிங், வேலைன்னு வந்துவிட்டால் வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் ஏழு வருடங்களாக காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆதி - நித்தி கல்யாணி ஆகிய இருவரும் ஜோடியாக சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தந்தனர். 

அப்போது கோவில் வாசலில் உள்ள பூ கடையில் ஜோடியாக பூ வாங்க வந்தபோது அவர்களை அடையாளம் கண்ட ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க சூழ்ந்தனர். பின்னர் அவர்களுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகர் ஒருவரின் குழந்தையை வெடிப்பில் தூக்கி வைத்தவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Tap to resize

Latest Videos

ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் கோவில் வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பத்திரமாக அழைத்து, சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடிக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

click me!