ரொமான்ட்டிக்  செய்யும் வயதை கடந்துவிட்டேன்.... நடிகர் ஷாருக்கான் உருக்கம்...!!!

 
Published : Jan 25, 2017, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ரொமான்ட்டிக்  செய்யும் வயதை கடந்துவிட்டேன்.... நடிகர் ஷாருக்கான் உருக்கம்...!!!

சுருக்கம்

இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார்ராக வளம் வருபவர் நடிகர் ஷாருக்கான், இந்நிலையில் இன்று அவர்  நடித்த  'ரயீஸ்' படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கானிடம் நீங்கள் ஏன் சமீபகாலமாக ரொமான்ட்டிக் படங்களில் நடிப்பதில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நான் ரொமான்ஸ் செய்யும் வயதை கடந்து விட்டேன் என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார், மேலும் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு அதுபோன்ற வாய்ப்புகளை கொடுத்து ஒதிங்கி கொள்வது தான் மூத்த நடிகர்களுடைய கடமை என கூறி அனைவருடைய கை தட்டல்களையும் அள்ளினார்.

மேலும், தற்போது இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்தில் தனக்கு பொருந்த கூடிய மக்கள் ஏற்று கொள்ளும் வகையில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதாக தெரிவித்தார்.

நடிகர் ஷாருகான் நடிப்பில் கடைசியாக 'ஜப் தக் ஹே ஜான் ' என்கிற ரொமான்ட்டிக் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடதக்கது.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!