பாய் ஃப்ரெண்டுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு - தீபாவளி ஸ்பெஷலாக வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்!

By Selvanayagam PFirst Published Oct 27, 2019, 5:36 PM IST
Highlights

தசாவதாரம், கண்டேன் காதலை போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலு ஷம்மு. பின்னர், படிப்படியாக வளர்ந்து சகலகலா வல்லவன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தார்.

இதில், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சூரியின் காதலியாக நடித்து பிரபலமான அவர், சமீபகாலமாக அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோவையும், ஆண் நண்பர்களுடன் இணைந்து நெருக்கமாக நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டு சோசியல் மீடியாவை கலங்கடித்து வருகிறார்


 
அண்மையில், நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட குளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். 

அந்தவகையில், தற்போது நட்சத்திர ஹோட்டலில் தனது ஆண் நண்பர் அபிராஜ் உடன் இணைந்து நெருக்கமாக ஆட்டம்போட்டுள்ள ஒரு கவர்ச்சி வீடியோவை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார். 

கிறங்கடிக்கும் நடன அசைவுகளுடன் ஷாலு ஷம்மு போட்டுள்ள ஆட்டம், ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

click me!