
அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். பான் இந்தியா படமான இது வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி என தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்துள்ளதால் இப்படத்திற்கு தமிழ் நாட்டிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனால் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தி உள்ளனர். இதில் இயக்குனர் அட்லீ, நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி என இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் படையெடுத்து வந்து கலந்துகொண்டுள்ளனர். சாய்ராம் கல்லூரியில் ஜவான் ஆடியோ லாஞ்ச் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... ஜவான் ஆடியோ லான்ச்..! பாலிவுட் கிங் கானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்..! வைரல் வீடியோ..
ஜவான் படம் மூலம் அனிருத் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவர் இசையில் இதுவரை வெளிவந்த வந்த எடம், ஹையோடா மற்றும் ராமையா வஸ்தாவையா ஆகிய மூன்று பாடல்களும் வேறலெவலில் ஹிட் அடித்தன.
இந்நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வந்த இடம் பாடலை அனிருத் லைவ்வாக பாடினார். அப்போது திடீரென மேடையேறி வந்த ஷாருக்கான், அனிருத் உடன் சேர்ந்து அப்பாடலுக்கு மேடையிலேயே குத்தாட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போகினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஜவான் ஆடியோ லாஞ்சுக்கு ஆப்சென்ட் ஆன நயன்தாரா... அப்செட் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.