நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்திய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்திய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், திரையுலகில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் புராண பின்னணியோடு உருவாகும் சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விவாகரத்துக்கு முன்னரே இந்தப்படத்தில் நடிக்க சமந்தா கமிட் ஆகி இருந்தாலும், இந்த படத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி, கணவர் நாக சைதன்யாவோடு... குழந்தை பெற்று கொண்டு செட்டில் ஆக முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்னதாகவே, சமந்தா - நாக சைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்தில் முடிந்தது.
பிரியா பவானி ஷங்கருக்கு கிடைத்த ஜாக்பார்ட் பட வாய்ப்பு? இனி இவங்கள கையில பிடிக்க முடியாது!
விவாகரத்துக்கு பின்னர், ஒரு சிறு இடைவெளி எடுத்து கொண்ட சமந்தா... 'யசோதா' படத்திலும் நடித்து வந்தார். மேலும் சாகுந்தலம் திரைப்படம் புராண கதை என்பதால், எதிர்பார்த்ததை விட, படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆனது. இடையே மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா... தற்போது அதில் இருந்து மீண்டுள்ள நிலையில், சாகுந்தலம் படத்தின் புரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
ஏற்கனவே இப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் போன நிலையில், தற்போது ஏப்ரல் 14 அதாவது தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி படத்தின் புரோமோஷன் பணிகளை துவங்கியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா பேசும் காட்சிகளும், ஐதராபாத்தில் உள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெடம்மா தல்லி அம்மன் கோவிலில்... சாமிக்கு பட்டுப்புடவை, வளையல்கள் போன்றவை சாற்றி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருவதோடு, படக்குழுவினருக்கு ரசிகர்கள் தங்களின், வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் குணசேகரன் இயக்கி உள்ளார். இவர் நடிகை அனுஷ்கா நடித்த 'ருத்ரமாதேவி' உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். காளிதாசர் இயற்றிய 'சாகுந்தலம்' என்ற நூலை அடிப்படையாக வைத்தே இப்படம் 'சகுந்தலம்' என்கிற பெயரில் உருவாகி உள்ளது. ஹீரோவாக தேவ் மோகன் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்பாபு, கௌதமி, அதிதி பாலன், மற்றும் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா உள்ளிட்ட பல நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொதப்பிய அட்லீ..? தள்ளிபோகிறதா 'ஜவான்' ரிலீஸ்..!