தன்னைவிட குறைந்த வயது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ்... ஓப்பனாக ஒத்துக்கொண்ட ராஷ்மிகா - அப்போ விஜய் நிலைமை?

Published : Mar 15, 2023, 10:26 AM IST
தன்னைவிட குறைந்த வயது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ்... ஓப்பனாக ஒத்துக்கொண்ட ராஷ்மிகா - அப்போ விஜய் நிலைமை?

சுருக்கம்

மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல கிரிக்கெட் வீரர் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப்பற்றிய காதல் சர்ச்சைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நடிகை ராஷ்மிகா முதலில் ரக்‌ஷித் ஷெட்டி என்கிற கன்னட நடிகரை காதலித்தார். இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் கூட ஆனது. ஆனால் கடைசியில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்துக்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகா, தொடர்ச்சியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று வந்தனர்.

இதையும் படியுங்கள்... watch : பேஷன் ஷோவில் ஜிமிக்கி பொண்ணாக வலம் வந்த ராஷ்மிகாவின் கியூட்டான ரேம்ப் வாக் வீடியோ

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீது கிரஷ் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இதெல்லாம் வதந்தி எனக்கூறி சுப்மன் கில் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து 23 வயதாகும் சுப்மன் கில் மீதான கிரஷ் குறித்து 26 வயதாகும் நடிகை ராஷ்மிகா அளித்துள்ள ரியாக்‌ஷன் தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். அப்போது கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது உங்களுக்கு கிரஷ் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆம் என கண்ணடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். தன்னைவிட குறைந்த வயது வீரர் மீது கிரஷ் இருப்பதாக ராஷ்மிகா சொன்னதைப் பார்த்த ரசிகர்கள், அப்போ விஜய் தேவரகொண்டாவின் நிலைமை என்னாச்சு என சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அலப்பறை செய்த வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பிரபல இயக்குனர்?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!