அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... வலிமை சுமாரான படம் தான் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி

Published : Jul 18, 2022, 12:20 PM IST
அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... வலிமை சுமாரான படம் தான் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி

சுருக்கம்

Sreenidhi : சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்ரீநிதி, தற்போது வலிமை சுமாரான படம் தான் என பேசி உள்ளது அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

7சி, யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. இவர் கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி இவர் நள்ளிரவில் சிம்புவின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சீரியல் நடிகை நக்‌ஷத்ரா குறித்தும், அவரது கணவர் குறித்தும் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தார் ஸ்ரீநிதி. இதன்பின்னர் தான் அவர் மன அழுத்தத்தில் இருக்கும் தகவல் வெளியானது. அவரது பெற்றோரும் இதனை உறுதிப்படுத்தினர். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த மாதம் சிகிச்சையும் பெற்றார் ஸ்ரீநிதி.

இதையும் படியுங்கள்... நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மகன்... மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மாதவன் - வைரலாகும் வீடியோ

அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ள ஸ்ரீநிதி, தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் அஜித் நடித்த வலிமை படம் பற்றி பேசி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது : “வலிமை படத்தை விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஏனென்றால் அது ஒரு படம். இப்பவும் சொல்றேன், வலிமை சுமாரான படம் தான். அந்த படம் எனக்கு பிடித்த படம் இல்லை. ஆனால் அது நம் சமுதாயத்துக்கு தேவையான படம்” என கூறி உள்ளார்.

இதற்கு முன்னர் வலிமை படம் ரிலீசான சமயத்தில் அப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்த ஸ்ரீநிதிக்கு அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி அவருக்கு கொலை மிரட்டல்களும், பாலியல் மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அப்படி இருக்கையில் தற்போது மீண்டும் வலிமை படத்தை அவர் விமர்சித்துள்ளது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...  போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்