நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மகன்... மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மாதவன் - வைரலாகும் வீடியோ

Published : Jul 18, 2022, 11:30 AM IST
நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மகன்... மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மாதவன் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

R Madhavan : மாதவனின் மகன் வேதந்த் நீச்சல் போட்டியில் சாதனை படைத்துள்ள நிலையில், அதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் தொடர்ந்து ரொமாண்டிக் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் மாதவன். இவர் சமீபத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அதன்படி இவர் ராக்கெட்ரி என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மாதவன்.

இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார் மாதவன். இப்படம் ஜூலை 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்ததும் வியப்படைந்ததாக கூறினார்.

இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு பின்னும் கவர்ச்சியை கைவிடல... மாலத்தீவில் டாப்லெஸ் போஸ் கொடுத்த KGF நடிகை - வைரலாகும் போட்டோஸ்

ராக்கெட்ரி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் மாதவன், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார். அதன்படி நடிகர் மாதவனின் மகன் வேதந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளாராம். 1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட வேதந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

மகன் நீச்சல் போட்டியில் சாதனை படைத்தபோது எடுத்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மாதவன். நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவனின் மகன் வேதந்த்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... சேரி மக்கள் அப்படித்தான் என பேசி சர்ச்சையில் சிக்கிய பிரிகிடா! எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்புகேட்ட பார்த்திபன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!