சேரி மக்கள் அப்படித்தான் என பேசி சர்ச்சையில் சிக்கிய பிரிகிடா! எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்புகேட்ட பார்த்திபன்

Published : Jul 18, 2022, 10:10 AM ISTUpdated : Jul 18, 2022, 10:39 AM IST
சேரி மக்கள் அப்படித்தான் என பேசி சர்ச்சையில் சிக்கிய பிரிகிடா! எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்புகேட்ட பார்த்திபன்

சுருக்கம்

Parthiban : சேரி மக்கள் அப்படித்தான் என இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவருக்காக நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளார். 

ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடரில் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிரிகிடா. இவர் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழலில் ஹீரோயினாக நடித்துள்ளார். முதலில் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவிற்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படம் ரிலீசானது முதல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள பிரிகிடாவின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க இவர் சேரி மக்கள் அப்படித்தான் என பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையும் படியுங்கள்... Asin : நடிகை அசின் மகளா இது..! அதுக்குள்ள இவ்ளோ வளந்துட்டாங்க... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

அதன்படி அவர் கூறியதாவது : “இரவின் நிழல் படத்தின் கதையே தனிஒருவனை பற்றியது தான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டுமே தான் நடந்திருக்கிறது என்றால், அதனை ராவாகத்தான் சொல்ல முடியும். உதாரணத்துக்கு ஒரு சேரி பகுதிக்கு போகிறோம் என்றால், அங்கு கெட்ட வார்த்தையை மட்டும் தான் கேட்க முடியும். சினிமாவுக்காக யாரும் ஏமாற்ற முடியாது” என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து டுவிட்டர் வாயிலாக தனது பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டார் பிரிகிடா. இருந்தபோதும் அவரது பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வந்ததால், தற்போது இயக்குனர் பார்த்திபனும் பிரிகிடாவிற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே!” என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு பின்னும் கவர்ச்சியை கைவிடல... மாலத்தீவில் டாப்லெஸ் போஸ் கொடுத்த KGF நடிகை - வைரலாகும் போட்டோஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?