38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை... அழகிய புகைப்படத்துடன் குட் நியூஸ்

Published : Sep 01, 2022, 01:41 PM ISTUpdated : Sep 01, 2022, 01:45 PM IST
38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை... அழகிய புகைப்படத்துடன் குட் நியூஸ்

சுருக்கம்

சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

மனசெல்லாம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவர் ஹோட்டல் நிர்வாக பயிற்சி ஈடுபட்டிருந்தபோது இயக்குனர் சந்தோஷ் மூலம் மனசெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ரறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக தோன்றியிருப்பார் சந்திரா.

பின்னர் ஏப்ரல் மாதத்தில் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் சந்திரா தோன்றிய காட்சிகள் நீக்கப்பட்டது. மேலும் மலையாள படங்களில் நடித்த இவர் ஸ்டாப் வைலன்ஸ் என்னும் படத்தில் முன்னணி நாயகியாக நடித்ததன் மூலம் அங்கும் அறிமுகமானார். பின்னர் பல மலையாள படங்களில் துணைவேடகளில் தோன்றிய சந்திரா லட்சுமணன் தமிழில் ஆதிக்கம் படத்தில் பிரியாவாக நடித்திருந்தார். பின்னர் தில்லாலங்கடிகள் ஸ்ரேயா தாஸ் வேடத்திலும் தோன்றி இருந்தார்.  தற்போது மலையாளத்தில் உருவாகும் கோஸ்ட் ரைடர் என்னும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...கடும் விமர்சனங்களால்..கோப்ரா படத்தின் நீளத்தை குறைக்கும் படக்குழு

 

 

அதோடு  பல சீரியல்களிலும் நடித்து வருகிறார் சந்திரல லட்சுமணன்.  முன்னதாக ஏசியாநெட்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்வாந்தம் என்னும் மலையாள தொடர் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். இதையடுத்து மலையாள பிரபல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியகளிலும் தோன்றி வந்தார் சந்திரா லட்சுமி.

கடந்த  2006 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் கங்கவாக நடித்திருந்தார். இதில் நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் வசந்தம், மகள், சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட சன் டிவி சீரியல்களிலும் துளசி என்னும் ஜீ தமிழ் சீரியலிலும் நடித்து வந்த இவர் தற்போது மலையாள சீரியல்களில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு ... சூரியின் விடுதலையில் இணைந்த உதயநிதி...புதிய அப்டேட் இதோ!

விஜயிடிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட சந்திர லட்சுமி தனது நீண்ட நாள் காதலரான டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவருக்கு வயது 38. டோஷ் கிறிஸ்டியம் மலையாளத்தில் பிரபலமான சீரியல் நடிகர் ஆவார். ரீல் ஜோடிகள் ஆன இவர்கள் ரியல் ஜோடியான தகவலை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.  வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு குறித்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...லோ...நெக் உடையில் கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாகினி நாயகி மவுனி ராய்...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?