விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் விடுதலையில் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உருவெடுத்துள்ளார் நடிகர் சூரி. முன்னதாக சிவகார்த்திகேயன் உடன் நண்பராக வரும் இவரது காட்சிகள் பல ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. வெண்ணிலா கபடி குழுவில் புரோட்டா சூரி ஆக அறிமுகமாக இருந்த சஇவர் இன்று தனது திறமையால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டார்.
தற்போது சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய தோற்றத்திலும் கௌதம் வாசுதேவன் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடிக்க உள்ளதாக தெரிகிறது. காவல்துறையில் பணிபுரிபவராக சூரி வரும் இந்த படத்தின் கதை மலைவாழ் மக்கள் தொடர்பான கதையாக இருக்கும் என்றும், இதில் விஜய் சேதுபதி போராளியாக வருவார் என்பதும் அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் மூலம் தெரிய வந்தது.
மேலும் செய்திகளுக்கு...லோ...நெக் உடையில் கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாகினி நாயகி மவுனி ராய்...
தற்போது திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் படமாக்கப்பட்டு வருகிறது பல ஆண்டு காத் [4] இந்தப் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவல் என கூறப்படுகிறது. இளையராஜா முதல் முறையாக வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ள இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.யின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இறுதி படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...தன் குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா!
Excited to announce our next release , in association with & .🙌✨ pic.twitter.com/WgjbUVEnBq
— Red Giant Movies (@RedGiantMovies_)