விஜய் ஏன் சைக்கிளில் வந்தார்..சஞ்சீவ் சொன்ன புதிய ரகசியம்

Published : Sep 01, 2022, 08:58 AM ISTUpdated : Sep 01, 2022, 12:14 PM IST
விஜய் ஏன்  சைக்கிளில் வந்தார்..சஞ்சீவ் சொன்ன புதிய ரகசியம்

சுருக்கம்

விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய் சிகப்பு மற்றும் கருப்பு வண்ணம் கலந்த சைக்கிளில் வாக்களிக்க வந்திருந்தார். இதனால் தளபதி திமுகவிற்கு சார்பாக இருக்கலாம் என்கிற ஒரு பேச்சு அடிபட்டது.

தமிழகத் திரை உலகில் முன்னணி நாயகனாக இருப்பவர் விஜய். சமீப காலமாக இவரது அரசியல் பயணம் குறித்த பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் உள்ளாட்சித் தேர்தல், நகராட்சி தேர்தல் என அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்திற்கு என சமூக வலைதள பக்கமும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டதுடன், எந்த பதிவாக இருந்தாலும் விஜயின் அறிவுறுத்தலின்படி என குறிப்பிடப்படுகிறது. 

முன்னதாக இவரின் பெயரில் கட்சி துவங்க டெல்லி வரை சென்றிருந்தார் இவரது தந்தை எஸ்.ஏ. சேகர் பி. பின்னர் விஜய் கட்சி துவங்க கூடாதென கண்டிப்பாக கூறியதால் அந்த முயற்சியை நிறுத்தி வைத்துள்ளதாக விஜயின் தந்தை முன்பு கூறியிருந்தார். இதற்கிடையே  விஜய் என்ன செய்தாலும் அதில் அரசியல் நோக்கத்திற்கான துணுக்கு இருக்குமா என்கிற கண்ணோட்டம் எழுந்து வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு...நயன் - விக்கி தயாரிப்பில் 'வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்' படத்தில் நடிக்கும் 5 நடிகைகள் யார் யார் தெர

அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய் சிகப்பு மற்றும் கருப்பு வண்ணம் கலந்த சைக்கிளில் வாக்களிக்க வந்திருந்தார். இதனால் தளபதி திமுகவிற்கு சார்பாக இருக்கலாம் என்கிற ஒரு பேச்சு அடிபட்டது.  ஆனால் அந்த சம்பவம் குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ், விஜய் ஏன் அந்த வண்ண சைக்கிளை பயன்படுத்தினார் என்பது குறித்த ரகசியத்தை கூறியுள்ளார். விஜயின் நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் சினிமா துறையில் பிரபலமானவர்கள். அவ்வப்போது விஜய் இவர்கள் சந்திக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆவது வழக்கம். 

மேலும் செய்திகள்: டைரிக்கு கிடைத்த வரவேற்பு... உருக்கமாக அறிக்கை வெளியிட்ட நடிகர் அருள்நிதி!

தற்போது விஜய் குறித்து  சஞ்சீவி  பேசி இருந்த பேட்டி ஒன்றுதான் ட்ரெண்டாகி வருகிறது.  அந்த பேட்டியில், அந்த செய்தியை பார்த்துவிட்டு தனக்கு சிரிப்பு வந்ததாகவும், பிறகு விஜய் இடமே போன் செய்து  இது குறித்து கேட்டதாகவும் வீட்டிற்கு பின்னால் தான் இருக்கிறது நான் காரை எடுத்துக் கொண்டு சென்றால் எனது பின்னால் ஊடகங்களும், ரசிகர்களும் வண்டிகளின் பின்தொடர்ந்து போலிங் பூத் அருகே பார்க் செய்து அந்த இடத்தில் ஸ்தம்பிக்க  செய்து விடுவார்கள். அதனால் தான் நான் சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்றேன் வேறு எந்த காரணமும் இல்லை என விஜய் கூறியதாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!