
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்திய நிலையில், இன்று தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, கனடாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். அப்போது புதாபெஸ்யில் இருந்து தமிழகம் திரும்ப இருந்த தன்னுடைய இசைகுருவான இளையராஜாவை சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை வீடியோ எடுத்து ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏர்போர்ட் பேக்டரி காரில் பயணித்தபடி... கோட்டு - சூட்டில் இருக்கும் இருவரும் மிகவும் சந்தோசமாக சிரித்தபடி இந்த வீடியோவில் உள்ளனர். இந்த வீடியோவை வெளியிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது...
மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து குக் வித் கோமாளி புகழ்..! வைரலாகும் திருமண போட்டோஸ்..!
நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்களது இலக்கு எப்பொழுதுமே தமிழ்நாடு தான். இளைராஜா புதாபெஸ்யில் இருந்தும், தான் கனடாவில் இருந்து திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.