நேற்று வெளியான பகாசூரன் டீசர் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை இயக்குனர் மோகன் ஜி தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மோகன் ஜி தற்போது பகாசசூரன் என்னும் படத்தை உருவாக்கி வருகிறார். இதில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னணி இயக்குனரான செல்வராகவன் சாணி காகிதம், பீஸ்ட் படங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவருக்கு நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லனாக என்ட்ரி கொடுப்பார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
இந்நிலையில் இயக்குனரின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது குறித்த முதல் பார்வையும் வெளியாகி உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதோடு படத்தின் டீசரரும் வெளியானது. இந்த படத்தில் ராதாரவி, கே ராஜன், ராம் சரவணன், சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாராக்ஷி கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னதாக செல்வராகவன் குறித்த பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் பட்டையுடன் இதற்கு முன்பு வரை அவரை காணாத தோற்றத்தில் இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Pooja Hegde : குட்டை டவுசர்.. கையில் கேமரா..கண்ணால் கவரும் விஜய் பட நாயகி
பகை முடிக்க வருகிறான் .. 28/08/22 ஞாயிறு காலை 10:10 மணிக்கு படத்தின் வெளியாகும்.. pic.twitter.com/bkzzOhwL1P
— Mohan G Kshatriyan (@mohandreamer)பின்னர் நாட்டி நடராஜ் தோற்றம் இடம்பெற்ற இரண்டாம் லுக்கும் வெளியானது. பின்னால் செய்தித்தாள்களும் கேமரா மற்றும் லைட் லைட் முன்பு நட்டி நடராஜ் எழுதிக் கொண்டிருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்த இரு போஸ்டர்களும் பகாசுரன் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்த நிலையில் நேற்று வெளியான டீசர் மேலும் ஆவலை அதிகரித்துள்ளது. டீசரின்படி, 'சமீப காலமாக இளம் பெண்கள் சிக்கித் தவிக்கும் இணையதள க்ரைம் குறித்த கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...பாக்கெட் வெளியில் தெரியுமா அளவிற்கு குட்டை டவுசருடன் சுற்றி திரியும் தனுஷ் பட நாயகி
அந்த காணொளிகள் இயக்குனர் செல்வராகவன் எதிரிகளை தொம்சம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதோடு இதில் நட்டி நடராஜ் துப்பறிவாளராக வரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு வைரலானது. நேற்று வெளியான பகாசூரன் டீசர் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை இயக்குனர் மோகன் ஜி தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்
It's One Million in One Day and trending in YouTube.. 💥
▶️ https://t.co/wKgreFQgJ0 pic.twitter.com/hje2k4b2if