மிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..!

By manimegalai aFirst Published Oct 28, 2020, 7:37 PM IST
Highlights

2007ல் பரத்தின் ‘கூடல் நகர்’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தனது யதார்த்தமான திரைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்த சீனு ராமசாமி, இந்த படத்தை தொடர்ந்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது.
 

2007ல் பரத்தின் ‘கூடல் நகர்’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தனது யதார்த்தமான திரைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்த சீனு ராமசாமி, இந்த படத்தை தொடர்ந்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது.

இதன் மூலம் முன்னணி இயக்குனராக அறியப்பட்ட, சீனு ராமசாமி  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்" என பதிவிட்ட பதிவு, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், மிரட்டல் விடுக்க காரணம் என்ன? யார்? என்பது குறித்து சீனு ராமசாமி தெரிவிக்கவில்லை. 

பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீனு ராமசாமி, ‘விஜய் சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என ஒரு சிலர் சித்தரித்து உள்ளனர் என்றும் நள்ளிரவிலும் எனது செல்போனுக்கு மிரட்டல் அழைப்புகள் மற்றும் ஆபாசமாக அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி நலன் கருதியே ’800’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்திதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் சீனுராமசாமி கூறினார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து சீனு ராமசாமி போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 

வாட்ஸ் அப் மூலமும், செல்போன் அழைப்பு மூலமும், தொடர்ந்து மிரட்டல் வருவதாக தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.  தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று அவர் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

click me!