“ரஜினி ரசிகர்கள் செய்வது கொஞ்சமும் நியாயமல்ல”... சீறிய சீமான்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 13, 2021, 03:23 PM IST
“ரஜினி ரசிகர்கள் செய்வது கொஞ்சமும் நியாயமல்ல”... சீறிய   சீமான்...!

சுருக்கம்

அதில் தன்னுடைய முடிவை தீர்க்கமாக கூறிவிட்டதாகவும், அரசியலுக்கு அழைத்து மேலும் மேலும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.   


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். பின்னர், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை நீண்ட அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினி அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றே அவருடைய வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். அரசியலுக்கு அழைப்பு விடுத்து முழக்கங்களை எழுப்பினர். 


இந்நிலையில் கடந்த 10ம் தேதி அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் தலையில் அறப்போராட்டம் நடைபெற்றது. தலைவரின் உத்தரவை மீறி அறவழிப்போராட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. இருப்பினும் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

உத்தரவையும் மீறி போராட்டத்தில் பங்கேற்ற ரசிகர்களால் கடுப்பான ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தன்னுடைய முடிவை தீர்க்கமாக கூறிவிட்டதாகவும், அரசியலுக்கு அழைத்து மேலும் மேலும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  இனிமேல்
தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது கனவில்தான் அமையும் எனக் கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி அவரது ரசிகர்கள் மேலும் மேலும் காயப்படுத்துவது நியாயமல்ல என்று தெரிவித்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?