யூ-டியூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை..! அதிரடி உத்தரவு போட்ட சென்னை காவல் ஆணையர்!

By manimegalai aFirst Published Jan 13, 2021, 2:16 PM IST
Highlights

இந்நிலையில் யூ டியூப்  சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து,  இதுபோல் யூ டியூப்  சேனல்களில் போடப்படும் ஆபாச வீடியோக்களை நீக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யூ-டியூப் சேனல்களால் பொதுமக்களுக்கு நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் போன்றே யூ-டியூப்பிலும் தனி மனிதனை தரக்குறைவாக விமர்சிப்பது, தேவையில்லாத மார்ப்பிங் வீடியோக்கள், போலி ஆடியோக்களை பதிவேற்றுவது போன்ற ஆபாசமான செயல்கள் அரங்கேறி வருகின்றன. 

சமீபத்தில் பிக்பாஸ் வனிதாவை தன்னுடை யூ-டியூப் சேனலில் தரக்குறைவாக விமர்சித்ததற்காக சூர்யாதேவி என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார். அதற்கு முன்னதாக கந்த சஷ்டி கவசத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக கறுப்பர் கூட்டம் யூ-சேனல் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மற்றொரு பிரச்சனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கொரோனா லாக்டவுனால் 2020ம் ஆண்டு எப்படி போனது என சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்களிடம் யூ-டியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அதில் ஒரு பெண்ணிடம் எடுக்கப்பட்ட பேட்டி மிகவும் ஆபாசமாக இருந்துள்ளது. இதுகுறித்து பெசன்ட் நகரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் அந்த யூ-டியூப் சேனல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்து அதை தவறாக எடிட் செய்து பதிவேற்றியதாக சென்னை டாக் என்ற யூ-டியூப் சேனலின் தொகுப்பாளர் அசென் பாட்ஷா, கேமராமேன் அஜய் பாபு, அந்த சேனலின் உரிமையாளரான தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த சேனலில் ஆபாசமாக பேட்டி கொடுத்த பெண்ணும், இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் செய்து, பணம் கொடுத்து தன்னை கட்டாயப்படுத்தி அந்த யூ டியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில் யூ டியூப்  சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து,  இதுபோல் யூ டியூப்  சேனல்களில் போடப்படும் ஆபாச வீடியோக்களை நீக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆபாச பேட்டியை ஒளிபரப்பியதற்காக, ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!