“கலைத்துறையை விட்டே காணாமல் போவீர்கள்”... விஜய் சேதுபதிக்கு சீமான் கட்சியினர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 13, 2021, 12:23 PM IST
Highlights

இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப் படுவீர்கள்.

அரசியல் த்ரில்லரான இந்த படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கோவிந்த் வசந்தா இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். அதேபோல் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் - விஜய்சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டீசர் வெளியிடப்பட்டது. அதில் சீமானை சீண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அரசியல்வாதியாக நடித்துள்ள பார்த்திபனுக்கு ராசிமான் என பெயர் வைத்துள்ளது டீசரில் காட்டப்படும் போஸ்டர்கள் மூலமாக உறுதியாகியுள்ளது. அதேபோல் அவருடைய கட்சிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பிரதான கலரான சிவப்பு மஞ்சள் சிவப்பு கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: அம்சமான ஸ்லீவ் லெஸ் உடை... லேசாக தெரியும் இடை... அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை இந்த படம் மூலமாக விஜய் சேதுபதி மறைமுகமாக தாக்கியுள்ளதாக சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பரவி வந்தன.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெற்றிக்குமரன் என்பவர் தனது முகநூலில் விஜய் சேதுபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் படி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், துக்ளக் தர்பார் திரைப்படக் குழுவினருக்கு வணக்கம்.... நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கனக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளைமையை தொலைத்து பொருளாதாரத்தை இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி.  நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம்தமிழர் கட்சிக்கும் எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எதிரானது போல கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவது போல சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது.

 

இதையும் படிங்க: அடக்கொடுமையே... கண்கூசும் அளவிற்கு படுகேவலமான உடையில்... 40வது பிறந்தநாளை கொண்டாடிய கிரண்...!

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் திரு. லலித்குமார் அவர்களிடம் கேட்டபொழுது "தெரியாமல்  நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை CG பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில்  ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம். இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப் படுவீர்கள்.
 

click me!