எப்படியிருக்கு விஜய்யின் “மாஸ்டர்”?... ரசிகர்கள் கருத்துடன் திரை விமர்சனம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 13, 2021, 10:50 AM IST
Highlights

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கடந்து ஓட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் நம்பிக்கையாக வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். சமூக வலைத்தளங்களில் படத்தை பற்றி ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து என்னவென பார்க்கலாம்... 

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கடந்து ஓட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் நம்பிக்கையாக வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். சமூக வலைத்தளங்களில் படத்தை பற்றி ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து என்னவென பார்க்கலாம்... 

படத்தின் கதை: 

குடிக்கு அடிமையான கல்லூரி பேராசிரியரான ஜே.டி மீது குற்றச்சாட்டுக்கள் குவிகிறது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வாத்தியாராக செல்கிறார். அங்குள்ள மாணவர்களை தவறாக வழி நடத்தும் வில்லன் பவானியை சந்திக்க அங்கிருந்து கதை சூடுபிடிக்கிறது. முதல் பாதியில் குடிகார புரோபசராகவும், இரண்டாவது பாதியில் சீர்திருத்த பள்ளி ஆசிரியராகவும் மிரட்டியிருக்கிறார் விஜய். வில்லனாக விஜய் சேதுபதி ரசிக்க வைத்துள்ளதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திரையில் மாளவிகா, ஆண்ட்ரியா ஆகியோர் சிறிது நேரமே தோன்றினாலும் ரசிகர்கள் மனதி நச்சென பதிகிறார்கள். அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன், தீனா, கௌரி கிஷன், ரம்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமான மாஸ்டருக்கு அனிருத்தின் இசையும், ஸ்டண்ட் சிவாவின் சண்டை காட்சிகளும் பலமாக அமைந்துள்ளது. 

ரசிகர்களின் விமர்சனம்: 

படம் மெரட்டல்🔥🔥கொஞ்சம் Lengthy-யா போகுதோனு தோனுச்சி..தலைவரோட Attitude, mannerism பாத்துட்டே இருக்கலாம்😍போதைய்லயே இருக்காப்ல😂விஜய் சேதுபதி எப்போதும் போல மெரட்டல்🔥2nd Half ரொம்ப புடிச்சிது😍Climax வெறித்தனம்🔥பக்கா Pongal Treat🔥

ஜெய்ச்சிட்ட Bro ❤️🔥

— Bhairava Mani (@bhairavamani07)

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ஓபனிங் சீன்கள் சிறப்பாக இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கில்லி, துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மாஸ்டர் படம் விஜய்க்கு சிறப்பான படமாக அமைந்துள்ளதாக தெரிகிறது. விஜய்க்கு டப் கொடுக்கும் கொடூர வில்லனாக விஜய் சேதுபதி மாஸ் காட்டியிருக்கிறார். இண்டெர்வெல் ப்ளாக்கில் "ஐ ஆம் வெய்ட்டிங்" என விஜய்சேதுபதி பேசும் வசனத்திற்கு செம்ம ரெஸ்பான்ஸ். 

3/5

First off padam Vera level 👌🔥
Second off - 🥴

Konjam padam leanth korchuirukalam , semma lag vera level acting 🔥

— 🇻 🇮 🇨 🇰 🇾 (@Master__Vicky)

முதல் பாதியில் விஜய்யின் மாஸ் நடனம், கிளாசிக் நடிப்பு உற்சாகம் தருவதாக இருப்பதாலும் ரசிகர்கள் கருத்து கூறினாலும், இரண்டாவது பாதியில் கதையின் நீளம், திரைக்கதை சொதப்பல்கள் சற்றே அசதியை கொடுப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  



Positives's Performance Dialogues & Mannerisms's Score
Intro and College Portions

Negatives
Long Stunt Sequences
Film Length - Election Portions Are Completely Unwanted...But Being Frank VJS Overshadowed Thalapathy With His Evilness

— V🔑 (@Itz_vikki)

பலரும் அனிருத்தின் இசையை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். படத்தின் சோர்வை ஏற்படுத்தும் காட்சிகளில் எல்லாம் அனிருத்தின் இசை ப்ளஸாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 


a

click me!