'மாஸ்டர்' படத்தால் காசி தியேட்டருக்கு வந்த புதிய பிரச்சனை..! 5000 அபராதம் விதித்த போலீசார்..!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 13, 2021, 2:49 PM IST
Highlights

கட்டுப்பாடுகளை மீறி, சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி திரையரங்கில் இன்று காலை காட்சியின்போது அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.இதனையடுத்து திரையரங்குக்கு சென்று நேரில் ஆய்வு செய்த எம்ஜிஆர் நகர் போலீஸார், திரையரங்க நிர்வாகத்துக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் போகி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், சிறப்பு காட்சிக்கு கிடைத்த அனுமதியால் ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். சென்னை மட்டுமல்லாது சேலம், நெல்லை, கோவை ஆகிய பகுதிகளிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் தூள் பறந்தது.

ஆட்டம், பாட்டம், பட்டாசு வெடித்து கொண்டாடிய விஜய் ரசிகர்களால் பிரபல திரையரங்கிற்கு சிக்கல் உருவாகியுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், ஒவ்வொரு காட்சிக்கும் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள், ரசிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மீறி, சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி திரையரங்கில் இன்று காலை காட்சியின்போது அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.இதனையடுத்து திரையரங்குக்கு சென்று நேரில் ஆய்வு செய்த எம்ஜிஆர் நகர் போலீஸார், திரையரங்க நிர்வாகத்துக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

அத்துடன், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கொரோனாவை பரப்பியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் தியேட்டர் நிர்வாகத்தின் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

click me!