ஒரே நாளில் 80 நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகும் சர்கார்! விஜயின் புதிய சாதனை!

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 10:58 AM IST
Highlights

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வது திரைப்படமாகியுள்ள ‘சர்கார்’ சுமார் 80 நாடுகளில் 1200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள தகவல், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வது திரைப்படமாகியுள்ள ‘சர்கார்’ சுமார் 80 நாடுகளில் 1200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள தகவல், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

துப்பாக்கி, கத்தி என்ற பிரமாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, தற்போது சன் பிக்சர்ஸ் என்ற ஜாம்பவானின் துணையோடு, களமிறங்கியுள்ள படமான சர்கார், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் பேச்சு, இந்தப் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், படத்தின் டீசர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இதனால் படக்குழு ஏற்கெனவே உற்சாகத்தில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் பட வெளியீட்டுக்கு முன்பே ரூ.200 கோடி வியாபாரம் உள்ளிட்ட பல சாதனைகளை சர்கார் நிகழ்த்தியுள்ளது, ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் உள்ளிட்டோருக்கு உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், சுமார் 80 நாடுகளில், 1200 திரையரங்குகளுக்கும் மேல் ‘சர்கார்’ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் இதனை முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனம், போலாந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் சர்கார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதேபோல், இந்த படத்தை அமெரிக்காவில் நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் யுஎஸ்ஏ ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக வெளியான விஜய் படங்களை விட உலக நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் விஜய் படம் என்ற பெருமையை சர்கார் பெறவுள்ளது.

click me!