27 வயது 75 வயது வரை... விஞ்ஞானி நம்பி நாராயண் வேடத்தில் அசத்தும் மாதவன்!

Published : Oct 30, 2018, 10:24 AM IST
27 வயது 75 வயது வரை... விஞ்ஞானி நம்பி நாராயண் வேடத்தில் அசத்தும் மாதவன்!

சுருக்கம்

’விகரம் வேதா’படத்துக்கு மாதவனின் ஒருவருட அயராத உழைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ராக்கெட்- த நம்பி எஃபெக்ட்’. ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மைக் கதையான இதில் நம்பியின் 27 வயது 75 வயது வரையிலான தோற்றங்களில் வருகிறார் மாதவன். 

’விகரம் வேதா’படத்துக்கு மாதவனின் ஒருவருட அயராத உழைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ராக்கெட்- த நம்பி எஃபெக்ட்’. ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மைக் கதையான இதில் நம்பியின் 27 வயது 75 வயது வரையிலான தோற்றங்களில் வருகிறார் மாதவன். இதில் சிறிதும் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக சுமார் ஒரு ஆண்டு காலம் வேறு படங்களுக்கு கதை கூட கேட்காமல் இருந்திருக்கிறார் மாதவன். 

இந்தப் படத்தின் டீசர் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் நடிகர் மாதவன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்த உலகத்தில் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அதில் பல கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். பல கதைகள் உங்க காதுக்கே வராமல் போயிருக்கலாம். ஆனால், சில கதைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது இந்த நாட்டு மேல உங்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதற்குச் சமம். 

நம்பி நாராயணன். இவர் கதையை நீங்கள் கேட்டால், சாதனைகளைப் பார்த்தால், அதை பற்றி பேசாமல் இருக்க முடியாது. ராக்கெட் - தி நம்பி எஃபெக்ட். இதைப் பற்றி தெரியாதவர்கள் தெரிஞ்சிப்பாங்க. தெரியும் என்று நினைப்பவர்கள், கேட்டு மிரண்டுடுவாங்க. இந்தப் படத்தோட டீசர் பாருங்க. அக்டோபர் 31ஆம் தேதி காலை 11.30 மணிக்கு” என்று பேசியுள்ளார். 

அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்றுள்ள ஆனந்த மஹாதேவன் இந்தப் படத்தை இயக்குகிறார். 1994ஆம் ஆண்டு உளவுத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதான நம்பி நாராயணன், 1996ஆம் ஆண்டு அக்குற்றச்சாட்டை சிபிஐ தள்ளுபடி செய்கிறது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கை 1998ஆம் ஆண்டு இவர் குற்றவாளி இல்லை எனக் கண்டறிந்து 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடுகிறது. இப்படத்தில் நம்பியின் தோற்றத்துக்காக மாதவன் மெனக்கெட்டிருப்பதற்கு ’திஸ் இஸ் ஃபெண்டாஸ்டிக் பிரதர்’ என்று நடிகர் சூர்யா கமெண்ட் அடித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி