
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென், யோகிபாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான "டகால்டி" திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஒரே நேரத்தில் "டகால்டி", "சர்வர் சுந்தரம்" படங்கள் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், பாராதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர் சங்க கூட்டுக்குழுவினர் தலையிட்டு சமரசம் செய்துவைத்தனர். இதையடுத்து "சர்வர் சுந்தரம்" படம் மேலும் இரு வாரங்களுக்கு தள்ளிப்போயுள்ளது.
சந்தானம் மட்டுமே நடித்தாலே காமெடி களைகட்டும், கூடவே யோகிபாபுவும் இருக்காரே தியேட்டரில் காமெடி சரவெடி சும்மா பிச்சி உதறப்போகுது என தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் #DagaaltyFromToday என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்த சந்தானம் ரசிகர்கள் நொந்துபோயுள்ளனர்.
இதையும் படிங்க: பலத்த அடிவாங்கியும் திருந்தாத லைகா... அடுத்த படமும் இவருடன் தானாம்...!
வில்லனிடம் மாட்டிக் கொண்ட ஹீரோயினை காப்பாற்றும் ஹீரோ என்ற ஒற்றை வரி பார்மூலா தமிழ் சினிமாவில் ரொம்ப பழசு, அதையே கொஞ்சம் காமெடி கலந்து கொடுக்க ட்ரை செய்துள்ளனர். சந்தானம் படம் நெடுக, வருபவர்களை கீறல்கூட விழாமல் அவஞ்சர்ஸ் ஹீரோ அளவுக்கு பைட் செய்கிறார் என்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
அடுத்தடுத்து ஹீரோவாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சந்தானத்திற்கு 'டகால்டி' படம் மிகப்பெரிய சறுக்கல் என ரசிகர்கள் ட்வீட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!
இந்த சந்தானம் படத்துல எத்தனை நாளைக்கு தான் ஹீரோயின லூசாவே காட்டுவாங்களோ... அந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணுங்க பாஸ் என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தானம் கெரியரின் மோசமான படம். பெரிதும் எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றமே மிச்சம். யோகிபாபு - சந்தானம் கூட்டணி போட்டும், படத்தில் காமெடியை தேட வேண்டியிருக்கு என கமெண்ட்கள் தெறிக்கின்றன.
இதையும் படிங்க: நடிகை முதல் மா நித்தியானந்த மாயி ஆக மாறியது வரை... ரஞ்சிதாவின் அசத்தல் புகைப்படங்கள்...!
இருப்பினும் சில முரட்டு சந்தானம் ரசிகர்களோ டகால்டி படம் தாறுமாறு, காமெடியில் வேற லெவல் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.