இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகைக்கு... 3வது குழந்தை பிறந்தாச்சு... என்ன குழந்தை தெரியுமா?

அன்பான கணவர், அழகான 3 குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கும் திவ்யா உன்னிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Actress Divya Unni and Family Welcome New Baby Photo Going Viral

மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் திவ்யா உன்னி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த திவ்யா உன்னி, டாக்டர் சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார் திவ்யா உன்னி. 

Actress Divya Unni and Family Welcome New Baby Photo Going Viral

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: நடிகை முதல் மா நித்தியானந்த மாயி ஆக மாறியது வரை... ரஞ்சிதாவின் அசத்தல் புகைப்படங்கள்...!

பிறகு 2018ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார். திவ்யா உன்னிக்கு ஏற்கனவே அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3வது முறையாக கர்ப்பமானார். திவ்யா உன்னிக்கு அவரது இரண்டாவது கணவர் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய போட்டோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

இதையும் படிங்க: ப்பா... என்னா கிளாமர்... இதுவரை யாரும் பார்த்திராத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...!

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னி, கடந்த 14ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு ஐஸ்வர்யா என பெயர் வைத்துள்ள திவ்யா உன்னி, குழந்தையுடன் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அன்பான கணவர், அழகான 3 குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கும் திவ்யா உன்னிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image