
பிரபல இயக்குனர் செல்வராகவன் :
தனித்துவமான ஐயத்தின் மூலம் தமிழ் திரையுகில் பிரபலமானவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் அவரது தம்பி தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம்.
செல்வராகவன் - தனுஷ் கூட்டணி :
அண்ணன் தம்பி கூட்டணியில் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர். அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... selvaraghavan : தனுஷ் ரூட்டை பின்பற்றும் செல்வராகவன்.... ‘நீங்களுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகராக களமிறங்கிய இயக்குனர் :
இயக்குனராக பிஸியாக வலம் வரும் செல்வராகவன். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம், விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். அதோடு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் செல்வராகவன். மேலும் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திலும் செல்வராகவன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..நடிகர் தனுஷ் அண்ணனா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய செல்வராகவன்...!
சாணிக்காகித கதாநாயகன் :
இயக்குநராக வலம் வந்த செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருமே அறிந்த செய்தி. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்தை ஸ்கிரீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் படம் வரும் மார்ச் 25 அல்லது ஏப்ரல் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.