தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தரையில் படுத்து உடம்பை வில்லாக வளைத்து சாகசம் செய்யும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் அறிமுகமான சமந்தா, அதன்பின்னர் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். உச்ச நடிகையாக இருக்கும்போதே நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
விவாகரத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் பிசியான சமந்தாவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. ஏறுமுகத்தில் சென்ற அவரது சினிமா கெரியருக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக திடீரென மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு சமந்தாவுக்கு ஏற்பட்டது. இதனால் சினிமாவை விட்டே விலகிய சமந்தா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அதிலிருந்து மீண்டுள்ள சமந்தா படிப்படியாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இதையும் படியுங்கள்...இவங்க மட்டும் எப்படி வயசாக ஆக யங்காயிட்டே போறாங்க.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்..
அந்த வகையில் தற்போது தமிழில் விஜய் நடிக்க உள்ள தளபதி 69 திரைப்படத்தில் சமந்தா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எச்.வினோத் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கத்தி, மெர்சல், தெறி போன்ற படங்களில் நடித்துள்ள சமந்தா, இப்படத்தின் மூலம் நான்காவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது சமந்தாவுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவை போல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அண்மையில் தனது சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் உடம்பை வில்லாக வளைத்து தரையில் சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. போல் டான்ஸிங் பயின்று வரும் சமந்தா, அதற்கான பயிற்சியின் போது எடுத்த வீடியோ தான் இது என கூறப்படுகிறது. அந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...பிகினி பேபியாக மாறிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்... டூர் போன இடத்தில் எடுத்த டூபீஸ் கிளிக்ஸ் இதோ