கொரோனாவால் இறந்துவிட்டேனா? தீயாக பரவிய வதந்தியால் கோவத்தில் கொந்தளித்த சக்திமான் நடிகர்!

By manimegalai a  |  First Published May 12, 2021, 5:44 PM IST

90 'ஸ் கிட்ஸ்சுகளின் கனவு ஹீரோவாக இருந்தவர், முகேஷ் கண்ணா. இவர் கொரோனாவால் இறந்துவிட்டதாக சிலர் கொளுத்தி போட்ட வதந்தியை தொடர்ந்து, அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 


90 'ஸ் கிட்ஸ்சுகளின் கனவு ஹீரோவாக இருந்தவர், முகேஷ் கண்ணா. இவர் கொரோனாவால் இறந்துவிட்டதாக சிலர் கொளுத்தி போட்ட வதந்தியை தொடர்ந்து, அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

90 ஸ் கிட்ஸ்சுகளுக்கு சூப்பர் ஹீரோவாக இருந்தவர் சக்திமான். இந்த தொடரை தயாரித்து நடித்து வந்தவர், பிரபல நடிகர் முகேஷ் கண்ணா. 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடரை பார்க்க ஞாயிற்று கிழமைகளில் டிவி முன் தவறாமல் அட்டடென்ஸ் போட்டு விடுவார்கள், இப்போது நடுத்தர வயதில் இருக்கும் அப்போதைய குட்டீஸ். எனவே இருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை இருந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இதியாவில் பல பிரபலங்களை பாரபச்சம் இல்லாமல் தாக்கி, சிலரது உயிரை பலி வாங்கி வரும், கொரோனா தொற்றுக்கு, நடிகர் முகேஷ் கண்ணா ஆளாகி, இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் யாரோ கொளுத்தி போட அந்த வதந்தி பாலிவுட், திரையுலகினர் மத்தியில் கொளுத்து விட்டு எரிய துவங்கி விட்டது. இந்த தகவலால் அவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வதந்தி குறித்து அறிந்த முகேஷ் கண்ணா, உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், 'தான் நல்ல உடல்நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதாகவும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டு கொண்டார்.  மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 

click me!