
சென்னை : நடிகர் அல்லு அர்ஜூனா நடித்த புஷ்பா 2 - தி ரூலர் படத்தின் சர்ச்சைகளும், வசூல் வேட்டையும் முடிவடைவதற்கு முன் அல்லு அர்ஜூனாவின் அடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் சோஷியல் மீடியாவில் தாறுமாறாக பரவி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. இதில் லேட்டஸ்டாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் தகவல் அல்லு அர்ஜூனாவை அடுத்த இயக்க போகும் டைரக்டர் பற்றிய தகவல் தான்.
புஷ்பா வசூல் :
புஷ்பா படத்திற்கு பிறகு அனைவராலும் கவனிக்கப்படும் பான் இந்தியன் ஹீரோ ஆகிய விட்டார் அல்லு அர்ஜூன். 2021ம் ஆண்டு ரிலீசான புஷ்பா தி ரைஸ் (முதல் பாகம் ) உலக அளவில் கிட்டதட்ட ரூ.400 கோடிகளை வசூல் செய்தது. இந்த படத்தின் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்திற்கு பெரிய பிளாசாக அமைந்தது. இதனால் புஷ்பா 2 - தி ரூலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வந்தது. ரசிகர்களின் பல வருட காத்திருப்பிற்கு பிறகு புஷ்பா 2 இந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசானது. ஆனால் படத்தின் ரிலீஸ் அன்றே ஏற்பட சர்ச்சையால், படம் பற்றிய பேச்சுக்கள் குறைந்து போனது.
இருந்தாலும் அல்லு அர்ஜூனா கைது, அரசியல் விமர்சனங்கள் ஆகியவற்றை கடந்தும் புஷ்பா 2 படம் உலக அளவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் ரூ.1300 கோடிகளை தாண்டி உள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் படத்தின் மொத்த வசூல் ரூ.1600 கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டே ரூ.300 முதல் ரூ.400 கோடி தான். அதை தாண்டி பல மடங்கு லாபத்தை இந்த படம் வசூலித்து விட்டதால் அல்லு அர்ஜூனாவின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அல்லு அர்ஜூனின் அடுத்த பட டைரக்டர் :
இதற்கிடையில், அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை டைரக்டர் அட்லீ இயக்க போவதாகவும், இந்த படத்தை சன் பிக்சஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை அட்லீயும், அல்லு அர்ஜூனாவும் சந்தித்து இது பற்றி பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இது பற்றிய பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பித்த விட்டதாம். இது பற்றி டைரக்டர் அட்லீயிடம் கேட்ட போது, "நாங்கள் இருவருமே அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்று தான் விருப்பப்படுகிறோம். ஆனால் காலம் தான் அனைத்தையும் முடிவு செய்யும். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று" என சூசகமாக பதிலளித்து விட்டு சென்றுள்ளார்.
எப்போது ஷூட்டிங்?
அல்லு அர்ஜூனா-அட்லீ படம் உறுதியாவதற்கு முன்பே அடுத்த பிளாக்பஸ்டர் படம் கன்ஃபார்ம் என ரசிகர்கள் பேச துவங்கி விட்டனர். இருந்தாலும் புஷ்பா 2 படத்திற்கு பிறகு திரிவிக்ரம் இயக்கத்தில், நாக வம்சி தயாரிக்கும் படத்தில் நடிக்க அல்லு அர்ஜூனா ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார். அல்லு அர்ஜூனாவில் பான் இந்தியா இமேஜிற்கு ஏற்ற மாதிரியான பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி அந்த படம் துவங்கப்பட்டால் அதன் ஷூட்டிங் வேலைகள் முடிவடைய எப்படியும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.
ஒருவேளை அட்லீ-அல்லு அர்ஜூனா படம் முடிவானால், திரிவிக்ரம் இயக்கும் படம் நிறைவடைந்த பிறகு அட்லீ படத்தின் வேலைகள் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர். இருந்தாலும் அவர்களை குஷிப்படுத்த இன்னும் ஒரு தகவலும் பரவி வருகிறது. அட்லீ- அல்லு அர்ஜூனா இணையும் படத்திற்கு பாடகர்கள் திப்பு- ஹரினியின் மகன் சாய் அப்யக்கர் தான் இசையமைக்க போகிறாராம். இவர் இசையமைத்து வெளியிட்ட "கட்சி சேரா" என்ற இசை ஆல்பம் தான் 2024ம் ஆண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இசை ஆல்பமாக உள்ளது. இவர் தற்போது ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.