Nayanthara wishes :செம குஷியில் நயன்தாரா..காதலருடன் சேர்ந்து வெளியிட்ட மெசேஜ்...என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 31, 2021, 08:24 PM ISTUpdated : Dec 31, 2021, 08:26 PM IST
Nayanthara wishes :செம குஷியில் நயன்தாரா..காதலருடன் சேர்ந்து வெளியிட்ட மெசேஜ்...என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

சுருக்கம்

Nayanthara wishes : புத்தாண்டையொட்டி, ரௌடி பிக்சர்ஸ் சார்பில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள நயன்தாரா- விக்னேஷ் சிவன், 2021 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்துக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர்.

வெற்றிகரமாக 6 ஆண்டுகளுக்கு மேல் குறையாத காதலுடன் வலம் வந்து கொண்டிருக்கும், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

 அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா. அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியதால் கண்டிப்பாக இந்த வருடம் திருமணம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு முன்னதாக தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நயன்தாரா நடித்து முடித்து விடுவார் என பார்த்தால், அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அதே போல் டீ நிறுவனம், அழகு கலை பொருட்கள், திரைப்படங்கள், என பல்வேறு நிறுவனங்களில் பணத்தை இன்வெர்ஸ் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதனை தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுவதை கடந்த சில வருடங்களாகவே வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா... இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கூட காதலருடன் தான் கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் சேர்ந்து நடத்தி வரும் ரௌடி பிக்சர்ஸ் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், அன்பும் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா, தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் ஆண்டே வெற்றிகரமாக ஆண்டாக அமைந்திருப்பதாக மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.

மேலும். நெற்றிக்கண், ராக்கி திரைப்படங்களுக்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் மூலம் அவை தங்கள் நிறுவனத்துக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்ததாக பெருமையுடன் இருவரும் கூறியுள்ளனர். அடுத்த ஆண்டில் காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், வாங்கிங், டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், ஊர்குருவி ஆகிய 4 புதிய படங்களுடன் ரௌடி பிக்சர்ஸ் களத்தில் இறக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா மகிழ்ச்சியொடு தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்