valimai trailer : விஸ்வாசம் அடிச்ச ஹிட்டை வலிமை நெருங்குமா?: ஹெவி ஆதாரங்களுடன் டவுட்டை கிளப்பும் விமர்சகர்கள்

By Kanmani PFirst Published Dec 31, 2021, 7:18 PM IST
Highlights

valimai trailer Review : ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்களையாவது வலிமை டிரெய்லரில் ஆங்காங்கே சேர்த்திருக்கலாம். ஆனால் ஃபுல் லென்த்க்கு வெறும் ஆக்‌ஷன் பட்டாசு மட்டுமே கொளுத்தியுள்ளனர். இது பெரிதாய் கைகொடுக்குமா? டவுட்டுதான்!

சத்தியமாக ரஜினி அதை எதிர்பார்க்கவில்லை! 2019ம் வருட தைப்பொங்கலன்று தனது  பேட்ட! படத்துடன் மோதும் அஜித்தின் விஸ்வாசம்! படம் தாறுமாறான ஹிட்டடிக்கும், ரஜினியை ஓவர் டேக் பண்ணிட்டார் அஜித்! எனும் பெயரை  அவருக்கு வாங்கிக் கொடுக்கும் என்று. ஆனால் அதெல்லாமே நடந்தது. 

இத்தனைக்கும் சன் பிக்சர்ஸ்! இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்! கம்பேக் சிம்ரன்! ரகளையான விஜய் சேதுபதி! ஸ்வீட் சர்ப்பரைஸ் த்ரிஷா! ஆஸம் கூட்டணியாக சசிக்குமார்! அனிருத்தின் அட்ராசிட்டி மியூஸிக்! என்று எல்லாமே பக்காவான பவர் பேக்ட் காம்போவாக அமைந்த படம். அதெல்லாம் தாண்டி ரஜினி மிக மிக ஸ்டைலியாக வடிவமைக்கப்பட்டிருந்தார் அந்த படத்தில். 

அதேவேளையில் விஸ்வாசத்தில் அஜித்துக்கு முழு நரை ஹேர் ஸ்டைல்! மெலடி கிங் இமான் இசை! காம்பேக்ட் ஆன சிறுத்தை சிவாவின் இயக்கம்! என்றுதான் வந்தது அந்தப் படம். ஆனாலும் அடித்துக் கெளப்பியது வரவேற்பில். விக்கிபீடியாவின் கணக்குப்படி பேட்டர் 220 முதல் 250 கோடி வசூல்! விஸ்வாசமோ 200 கோடி வசூல். 

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால் ரஜினி ஹீரோவாக நடித்த வகையில் பேட்ட படத்தின் பட்ஜெட்டே சுமார் இருநூறு கோடிகளை தொட்டிருக்கும். ஏன்னா அவருக்கே பட்ஜெட்டில் பாதி போயிருக்கும். அதை கம்பேர் செய்யும் போது அஜித் படத்தின் பட்ஜெட் கம்மிதான். ஆனால் வசூலோ பட்டாசு. 

இப்படி ரஜினியையே அடித்து துவம்சம் பண்ணிய அஜித்தின் நடிப்பில் இந்த 2022 பொங்கலுக்கு வெளியாகிறது ‘வலிமை’. இத்தனைக்கும் மாஸ் ஹீரோக்கள் யாருடைய படமும் அவருக்கு போட்டியாக களமிறங்கப் போவதில்லை. 30-ம் தேதி வெளியான டிரெய்லரும் ஹெவியாக ஹிட்டடித்திருக்கிறது. 

மேலும் அஜித்தும் பழைய ஹிட் சென்டிமெண்ட்  பார்த்து, பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார். ஆனாலும், ‘வலிமை மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூல் ஹிட்டடிக்குமா? என்பது டவுட்டே’ என்கிறார்கள் கோலிவுட் விமர்சகர்கள். காரணம் என்ன? என்று கேட்டால்….

“ரஜினியின் படத்தை தாண்டி விஸ்வாசம் ஹிட்டடிக்க  காரணம் அதன் அமைப்பு அப்படி. அம்மா சென்டிமெண்ட்! காதல்! காமெடி! அப்பா சென்டிமெண்ட்! அதன்பிறகு அதிரடி ஆக்‌ஷன் பிளாக்ஸ்! என்று பக்காவான ஃபுல் ஸ்பெஷல் சாப்பாடாக அது இருந்தது. அதனால் பெரிய ஹிட் அடித்தது. இத்தனைக்கும் பேட்ட படத்திலும் சென்டிமெண்ட்ஸ் இருந்தாலுமே கூட, அது விஸ்வாசம் அளவுக்கு எடுபடவுமில்லை. ஆக்‌ஷன் ஓவர் டோஸ். 

அதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் அப்படத்தை விட விஸ்வாசத்தை அதிகம் ரசித்தார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் ஒரு படம் மாஸ் ஹிட்டடிக்க வேண்டுமென்றால், அது ஃபேமிலி ஆடியன்ஸின் ரசனையில்தான் இருக்கிறது. 

ஆனால் வலிமை! பட டிரெய்லரை பார்க்கும்போது, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாகதான் தெரிகிறது. ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்களையாவது டிரெய்லரில் ஆங்காங்கே சேர்த்திருக்கலாம். ஆனால் ஃபுல் லென்த்க்கு வெறும் ஆக்‌ஷன் பட்டாசு மட்டுமே கொளுத்தியுள்ளனர். இது பெரிதாய் கைகொடுக்குமா? டவுட்டுதான்!

பெரிய படங்கள் வேறேதும் ரிலீஸாகாத காரணத்தால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்ல, விழா நாளில் சினிமா தியேட்டரில் போய் உட்கார்ந்தே ஆகணும் என்பதற்காக விஜய்யின் ரசிகர்கள் கூட அந்தப் படத்துக்கு நிச்சயம் போவார்கள், சிட்டி ஃபேமிலி ஆடியன்ஸும் போவார்கள். ஆனால்! பி மற்றும் சி சென்டர்களில் இந்தப் படம் ஹிட்டடிக்குமா? என்பது சந்தேகமே. படத்தின் கான்செப்ட் அவர்களுக்குப் புரிய வேண்டும்! மேலும் விஸ்வாசத்தின் தர லோக்கல் ஹிட்டுக்கு காரணம், அது எல்லா சென்டர்களையும், அதிலும் குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களை ஓவராக குஷி படுத்தியதுதான்.” என்கிறார்கள். 

ஆனால் விநோத் அண்ட்கோவோ மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கிறது இந்தப் படத்தின் வெற்றி என்பது மிகப்பெரிய வலிமையானதாக இருக்குமென்று! பாக்கத்தானே போறோம் இந்த அர்ஜூனோட ஆட்டத்த!

click me!