Beast First Single :பீஸ்ட் போஸ்டரை தொடர்ந்து முதல் சிங்கிள்.விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நியூஇயர் ட்ரீட்

Kanmani P   | Asianet News
Published : Dec 31, 2021, 06:56 PM ISTUpdated : Dec 31, 2021, 06:57 PM IST
Beast First Single :பீஸ்ட் போஸ்டரை தொடர்ந்து முதல் சிங்கிள்.விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் நியூஇயர் ட்ரீட்

சுருக்கம்

Beast First Single : இன்று விஜயின் பீஸ்ட் படம் வரும்  2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல் சிங்கிள் நாளை புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

நேற்று அஜித்தின் வலிமை ட்ரைலர் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. இந்த ட்ரைலரை அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து சால்டன் பேப்பர் ஸ்டைலில் இருக்கும் விஜயின் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டரில் பீஸ்ட் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புத்தாண்டு விருந்தாக நாளை பீஸ்ட் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது.

 

 

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

சுமார் 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து பின்னணி பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!