Beast Release Date : அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பருக்கு மாறும் விஜய்..?,வெளியானது பீஸ்ட் ரிலீஸ் டேட்...

By Kanmani PFirst Published Dec 31, 2021, 6:13 PM IST
Highlights

Beast Release Date : இன்று விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து சால்டன் பேப்பர் ஸ்டைலில் இருக்கும் விஜயின் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டரில் பீஸ்ட் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அஜித்தின் வலிமை ட்ரைலர் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. இந்த ட்ரைலரை அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து சால்டன் பேப்பர் ஸ்டைலில் இருக்கும் விஜயின் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டரில் பீஸ்ட் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

சுமார் 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து பின்னணி பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

click me!