
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுசமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைகள் கிட அடித்தே வருகிறது என்று சொல்லலாம். அந்தவகையில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விடுதலை என்னும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதற்கிடையே இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் தான் உருவாக்கி வரும் ‘ரைட்டர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதன் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில் வைரலாகி இருந்தது.. இதில், சமுத்திரக்கனி காவலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகிய 5 இயக்குநர்களின் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதன்படி நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. சமூத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அப்போது 'பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க , சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார். சிறந்த எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு . படம் விருவிருப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது. சிறந்த படத்தை தயாரிச்சிருக்கீங்க ரஞ்சித் என்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை வெகுவாக ரஜினி பாராட்டியுள்ளார்.
சூப்பர்ஸ்டார் போன் செய்து பாராட்டியதில் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் படக்குழுவினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.