The Iron Mask : முதலில் வலிமை..பின்னர் அயன் மாஸ்க்.. அதிரடி காட்ட வரும் ஜாக்கி சான்..

Kanmani P   | Asianet News
Published : Dec 31, 2021, 04:02 PM IST
The Iron Mask : முதலில் வலிமை..பின்னர்  அயன் மாஸ்க்.. அதிரடி காட்ட வரும் ஜாக்கி சான்..

சுருக்கம்

The Iron Mask : ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயன் மாஸ்க்" படம் வெளியீடு ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது!

வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.!

டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை!

இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள்!

ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது!

வலிமைப்படம் வெளியான பின்னர் இப்படம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. இந்த ஆண்டு மிகச்சிறந்த எண்டெர்டெயின்மெண்ட் பிக்சராக இது இருக்கும், நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படம் அதுவும் தமிழில் என்பதால் ரசிகர்கள் மிகவும் விரும்பிப்பார்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!