
ரசிகர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது. இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றிருந்தது.
இதற்கிடையே மாநாடு இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் விதமாக பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு படத்தின் 25 வது வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது. திரையரங்குகளை தொடர்ந்து OTT -யிலும் இந்த படம் மாஸ் காட்டி வருகிறது. மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, இதையடுத்து கௌதம் கார்த்திக்குடன் பத்து தல படம், அதையடுத்து கொரோனா குமார் படத்தில் கோகுல் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சிம்புவிடம் ஒரு கதை கூறியுள்ளார். கதை சிம்புக்கு பிடித்துள்ளது. கொரோனா குமாருக்குப் பிறகு சிம்புவின் 50-வது படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.