Ilaiyaraaja : ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி... கமல் பாட்டு பாடி மஜா பண்ணிய இளையராஜா - வைரலாகும் வீடியோ

Ganesh A   | Asianet News
Published : Dec 31, 2021, 01:11 PM IST
Ilaiyaraaja : ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி... கமல் பாட்டு பாடி மஜா பண்ணிய இளையராஜா - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

78 வயதிலும் ஓயாது உழைத்து வரும் இளையராஜாவின் உடல்நிலை குறித்து நேற்றிலிருந்தே பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 

இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தற்போது தமிழில் மாயோன் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

78 வயதிலும் ஓயாது உழைத்து வரும் இளையராஜாவின் உடல்நிலை குறித்து நேற்றிலிருந்தே பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் இசையமைத்த இளமை இதோ.. இதோ என்கிற பாடலை பாடியபடி அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு இறுதியில் இது எப்படி இருக்கு என ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசி, தான் நலமாக இருப்பதை சூசகமாக சொல்லிக் காட்டி உள்ளார்.

இளையராஜாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இளையராஜா சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலை சென்றுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!