ராணுவ வீரரும் பழம்பெரும் நடிகருமான ஜி கே பிள்ளை.. வயது மூப்பால் காலமானார்...

Kanmani P   | Asianet News
Published : Dec 31, 2021, 05:44 PM ISTUpdated : Dec 31, 2021, 06:02 PM IST
ராணுவ வீரரும் பழம்பெரும் நடிகருமான ஜி கே பிள்ளை.. வயது மூப்பால் காலமானார்...

சுருக்கம்

வயது மூப்பு காரணமாக 300 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் ஜிகே பிள்ளை இன்று காலமானார்....

மலையாள திரையுலகில் மிக பிரபலமான நடிகர் ஜி கே பிள்ளை முதலில் இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் 12 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். அதன்பின்பு திரை துறைக்கு வந்துள்ளார்.   கடந்த 1954ம் ஆண்டு வெளிவந்த சினேகசீமா படத்தின் மூலம் . .  அவரது முதல் தொலைக்காட்சி தொடர் கடமட்டத்து கத்தனார்.  குங்குமப்பூவு என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

சோழா, காரியஸ்தன் மற்றும் ஆனக்களரி ஆகியவை அவரது பிரபல திரைப்படங்கள் ஆகும்.  வில்லன் வேடங்களில் அதிகம் நடித்துள்ள அவர், 325 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.  கடந்த 65 ஆண்டுகளாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி காலமானார்.  அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.  அவரது மறைவுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அவரது சொந்த ஊரில் இன்று இறுதி சடங்கு நடைபெறும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்