Valimai update : வாவ்..வலிமையிலிருந்தும் வெளியான அப்டேட்..அஜித் படத்திற்கு சென்சார் போர்டின் ரிசல்ட் என்ன?

By Kanmani PFirst Published Dec 31, 2021, 7:46 PM IST
Highlights

Valimai update : பீஸ்ட் போஸ்டருடன் வலிமை படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்டும் போட்டாபோட்டி இட்டு ட்ரெண்டாகி வருகிறது. அதாவது வரும் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள வலிமை படம் U/A  சான்று பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 
 

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். நேர்கொண்ட பார்வையில் அஜித்தின் மாஸ் போதவில்லை என நினைத்தவர்களுக்கு சரியான விருந்தாக இந்த படம் அமையும் என்பதை வலிமை ட்ரைலர் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள வலிமை படம் U/A  சான்று பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

click me!