RJ Rachana passes away : இளம் நடிகை திடீர் மரணம்..அதிர்ச்சியில் திரை உலகம் ...

By Kanmani P  |  First Published Feb 23, 2022, 3:18 PM IST

RJ Rachana passes away :‘சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி’ என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாக நடித்த ரச்சனா மாரடைப்பால் உயிரிழந்தார்..


கன்னட பிரபலம் ரச்சனா நேற்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, நடிகை ரச்சனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

39 வயதான ரச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். சினிமா படங்களில் துணை நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி’ என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாக நடித்து இருந்தார். 

இந்நிலையில் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி இருக்கும்போது அவர் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ரச்சனா இறந்த செய்தியை அறிந்த கன்னட திரையுலகினர், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

click me!