kaathuvaakula rendu kaadhal : ஒரு ஜேக் ரெண்டு ரோஸ் வச்சு விக்னேஷ் சிவன் எடுத்த டைட்டானிக்.... வைரலாகும் வீடியோ

By Ganesh AsianetFirst Published Feb 23, 2022, 12:26 PM IST
Highlights

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெறும் டைட்டானிக் காட்சியை படமாக்கியபோது எடுத்த வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.  இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.

அடுத்ததாக இந்நிறுவனம், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ரேம்போ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா (Nayanthara), கண்மணி என்கிற கதாபாத்திரத்திலும், சமந்தா (Samantha) கத்திஜா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் (kaathuvaakula rendu kaadhal) படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெறும் டைட்டானிக் காட்சியை படமாக்கியபோது எடுத்த வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு ஜேக் மற்றும் ரெண்டு ரோஸ் உடன் எடுத்த டைட்டானிக் என குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இந்த காட்சியில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Jonita Gandhi Hot : அரபிக் குத்து பாடகியா இது? கவர்ச்சியில் அதகளப்படுத்தும் ஜோனிடா காந்தியின் கிக்கான போட்டோஸ்

click me!