Nadigar Sangam Election : நடிகர் சங்க தேர்தல்.... விஷால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Ganesh A   | Asianet News
Published : Feb 23, 2022, 11:44 AM IST
Nadigar Sangam Election : நடிகர் சங்க தேர்தல்.... விஷால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சுருக்கம்

நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி கிளை ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தலை  ரத்து செய்யக் கோரி  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. 

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படியாக இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதுடன்,  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறுதேர்தலுக்கு  அவசியமில்லை என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Vijay Deverakonda Tweet : ராஷ்மிகாவுடன் காதலா?.... மனதில் உள்ளதை ஓப்பனாக போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ