ரீமேக்கை கையில் எடுத்த ஆர்.ஜே.பாலாஜி..! இயக்குனர் பாக்யராஜுடன் திடீர் சந்திப்பு?

Published : Mar 01, 2021, 05:54 PM IST
ரீமேக்கை கையில் எடுத்த ஆர்.ஜே.பாலாஜி..! இயக்குனர் பாக்யராஜுடன் திடீர் சந்திப்பு?

சுருக்கம்

நடிகை நயன்தாரா நடிப்பில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு... ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'.  திரைப்படத்தை இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.   

நடிகை நயன்தாரா நடிப்பில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு... ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'.  திரைப்படத்தை இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. 

மேலும் செய்திகள்: நடிகை கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரன்ட்! மும்பை நீதிமன்றம் அதிரடி!
 

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் இவர், சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை கையில் எடுத்துள்ளதாகவும், இதற்காக இயக்குனர் பாக்யராஜ் சந்தித்து பேசி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. சமீபகாலமாக மற்ற மொழிகளில், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ரீமேக் செய்யப்படும் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றது. தற்போது இந்த ரீமேக் முயற்சியை கையில் எடுத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் திரையுலகில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தை தான் ரீமேக் செய்ய உள்ளார் ரீமேக் செய்ய உள்ளாராம் ஆர்.ஜே.பாலாஜி.

மேலும் செய்திகள்:இது என்ன கூத்து?... பட்டுப்புடவையை பாதியாக வெட்டி விட்டு...கால்களை முழுசா காட்டிய குக் வித் கோமாளி பவி...!
 

மேலும் செய்திகள்:அழகு தேவதையாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளினியா இது? ஆச்சரியப்பட வைத்த வி.ஜே.ரம்யா!
 

இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு... ’வீட்ல விசேஷங்க’ என்று டைட்டில் வைக்க பாலாஜி திட்டமிட்டுள்ளார். இதே டைட்டிலில் ஏற்கனவே கே பாக்யராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில்,  இந்த தலைப்புக்காக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அக்கா என்று கூட பார்க்கலயே: பாதகத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் போட்டுக் கொடுத்த சந்திரகலா!
நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!