இந்த மனசு தான் சார் கடவுள்..! பல வருட போராட்டத்திற்கு, சில நிமிடங்களில் தீர்வு கொண்டு வந்த சோனு சூட்!

Published : Mar 01, 2021, 02:42 PM IST
இந்த மனசு தான் சார் கடவுள்..! பல வருட போராட்டத்திற்கு, சில நிமிடங்களில் தீர்வு கொண்டு வந்த சோனு சூட்!

சுருக்கம்

தன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட், தற்போது பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத விஷத்திற்கு அதிரடியாக தீர்வை கொண்டுவந்துள்ளார். இதனால் நடிகர் சோனு சூட்டிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட், தற்போது பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத விஷத்திற்கு அதிரடியாக தீர்வை கொண்டுவந்துள்ளார். இதனால் நடிகர் சோனு சூட்டிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: வெள்ளை உடையில்... துளியும் மேக்அப் இன்றி அழகில் மிரட்டும் ஸ்ரீதிவ்யா! சொக்கி போன ரசிகர்கள்!
 

அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில்  ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார். 

அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: அழகு தேவதையாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளினியா இது? ஆச்சரியப்பட வைத்த வி.ஜே.ரம்யா!
 

இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டிற்கு, தற்போது திரையிலும் நல்ல காலம் ஆரம்பித்துள்ளது. அதாவது ஹீரோவாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தன்னலம் கருதாது எளிய மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ள சோனு சூட்டை அவரது ரசிகர்கள் கோவில் கூட கட்டி விட்டனர்.

இந்நிலையில் பல வருடங்களாக, தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைக்கு விடுவி காலத்தை கொண்டு வந்துள்ளார்.  ஜான்சி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஒருவர், சோனுசூட்டை அணுகி, தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் பல கிலோமீட்டர்கள் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவதாகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்..! உதவியாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளர்! வைரலாகும் புகைப்படம்..!
 

இந்த தகவல் தெரிய வந்ததும், உடனடியாக அந்த கிராமத்திற்கு ஒரு போர்வெல் அமைத்து, தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடிவெடுத்து. அதற்கான பணியிலும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அந்த கிராமத்தில் போர்வெல் போடப்பட்டு தற்போது அங்கு தண்ணீர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களாக தண்ணீர் பிரச்சனைக்காக போராடி அலுத்து போன, மக்கள் தற்போது தண்ணீர் பிரச்சனை சோனு சூட் மூலம் முடிவுக்கு வந்துள்ளதால் உணர்வு பூர்வமாக அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?