
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் முதல் முறையாக இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம், லேட்டாக வந்தாலும் சும்மா லேட்டஸ்ட்டாக வெளியாகி, பல சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள 'வாத்தி கம்மிங்' பாடலுக்கான வீடியோ செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புடன் சுமார் 50 நாட்களை கடந்தும், பல்வேறு திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நிலையில், விஜய்யுடன் 'பைரவா' மற்றும் 'சர்கார்' என இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், யாரும் யோசிக்க கூட முடியாத அளவிற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதகளம் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்: மீண்டும் துவங்கியது படப்பிடிப்பு! முதல் நாளே ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!
மேலும் செய்திகள்: புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்..! உதவியாக இருந்த விஜய் டிவி தொகுப்பாளர்! வைரலாகும் புகைப்படம்..!
இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டி நைக் தான் 'வாத்தி கம்மிங்' பாடலை செம்ம என்ஜோய் செய்கிறார். இந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் பெற்றுள்ளது. இந்த விடியோவை பார்த்து ரசிகர்கள் பலர், யாரும் இப்படி யோசிக்க கூட முடியாது என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.